சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இயல் துறையில் இளங்கலை தமிழ் 2018-2025 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதுகலைத் தமிழ் 2025 2025 ஆம் கல்வியாண்டில் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது தமிழ் துறையில் தற்பொழுது தகுதியான ஆறு பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழில் உலகமயமாதலுக்கு ஏற்ப மாற்றி நவீனத்திற்கும் செயல் திறனுக்கும், பல்துறை ஆய்வு நோக்கமாக கொண்டதாக அமைப்பதும், அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உருவாக வழி காட்டுவதும்.
கலை பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்தி மொழி, இலக்கியம், இலக்கணம் மற்றும் எதிர்கால சமூகத்திற்குத் தேவையான மரபுகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும்.
இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின் வாழ்வியலை சரியான புரிதலுக்கு உட்படுத்துவதும், முறையான நாகரிகத்தை நோக்கி தமிழ்ச் சமூகம் நகர்வதற்கு தூண்டுவதும் நோக்கமாக அமைகின்றது.
1. கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த பரந்த நோக்கை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றது. 15-02-2025
2. மாபெரும் தமிழ்க்கனவு என்னும் பொருண்மையில் தமிழ் மொழியின் பெருமையை மாணவர்கள் உணரும் வகையில் அருணை கல்லூரியில் நடத்த ப்பெற்ற கருத்தரங்க பங்கேற்பு. 16.02.2025
3. சாதி, மத அடையாளங்களை க் கடந்து தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவான தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழ் துறையின் சார்பில் 13-02-2025 நடத்தப்பட்டது.
4. நீர் மேலாண்மையை முதன்மையாகக் கொண்டு, இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழ் த்துறை மாணவர்களை வைத்து 500 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டுள்ளது.
5. தமிழக அரசாங்கம், மாநில அரசு வேலைகளில் பணியமர்வதற்கு அடிப்படைத் தமிழ் மொழி அறிவு கட்டாயத் தேர்வை உருவாக்கி உள்ளது. அத்தகுதித் தேர்விற்கு அனைத்து துறை மாணவர்களுக்கும் தமிழ் இயல் துறையின் சார்பில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
Dr. R.AGILANDEESHWARI TAMIL HOD
M.A., M.Phil., B.Ed.,
Ph.D.
Mr.S.SHANMUGAMANI TAMIL
M.A., M.Phil., B.Ed.,
NET, SET.-
Assistant
Professor
Mr.M. MURUGAVEL TAMIL
M.A., M.Phil., B.Ed.,
NET-
Assistant
Professor
Mr.R. RAJKUMAR TAMIL
Assistant
Professor M.A.,
Mrs.SUMANGALA SELWYN TAMIL
M.A.,M.Phil -
Assistant
Professor